தமிழ்நாடு

“தேர்வு வாரியம் மூலம் விரைவில் 4500 மருத்துவ பணியாளர்கள் நியமனம்” - அமைச்சர் விஜயபாஸ்கர்

“தேர்வு வாரியம் மூலம் விரைவில் 4500 மருத்துவ பணியாளர்கள் நியமனம்” - அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

இந்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக 4,500 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நவீன சிகிச்சை முறைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவர்களின் போராட்டம் பற்றி தமிழக முதல்வரிடம் கூறி உள்ளேன். அரசு அளித்த உறுதியின் படி மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும். எம்.ஆர்.பியில் பணிபுரியும் 9533 செவிலியர்கள் தமிழக அரசால் பணி நியமனம் செய்யப்பட்டனர். 

அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதை அடுத்து இரண்டு மடங்கு ஊதிய உயர்வு வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. காலியிடத்திற்கு தகுந்தவாறு பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். நவம்பர் இறுதிக்குள் 2,345 செவிலியர்கள், 1,234 கிராமப்புற செவிலியர்கள், 90 இயன்முறை மருத்துவர்கள் என மொத்தம் 4,500 பேர் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்” எனத் தெரிவித்தார்.