தமிழ்நாடு

வரத்து இல்லை: சென்னையில் உயர்ந்த காய்கறிகளின் விலை

வரத்து இல்லை: சென்னையில் உயர்ந்த காய்கறிகளின் விலை

webteam

சென்னைக்கு காய்கறிகள் வரத்து இல்லாததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை அடுத்து, சென்னையில் காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து காய்கறி வராததால் மேலும் விலை உயரும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னையில் நேற்று 25 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 120லிருந்து 140ஆக உயர்ந்துள்ளது. நாட்டுத் தக்காளி விலை 40ரூபாயாகவும், பெங்களுரு தக்காளி விலை 60ஆகவும் அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு விலை 60ரூபாயாகவும், கோஸ் விலை 20ரூபாயிலிருந்து 40ஆகவும், பீட்ரூட் விலை 100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கேரட் விலை ஒரு கிலோ 100 ரூபாயிலிருந்து 160ஆக உயர்ந்துள்ளது