தமிழ்நாடு

வேடந்தாங்கலில் குவிந்த 25 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள்

வேடந்தாங்கலில் குவிந்த 25 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள்

webteam


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பறவைகள் வந்துள்ளன.

இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால் வேடந்தாங்கல் ஏரி 80 சதவீத அளவே நிரம்பியது. இதனால் பறவைகள் வரத்து நவம்பர் மாதம் வரை குறைந்த அளவே இருந்தது. தற்பொழுது பறவைகள் சரணாலயத்தில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து 17 வகையான பறவைகள் வந்துள்ளன.

நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ண நாரை, கரண்டி வாயன், தட்டை வாயன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்புத்தாரா, நீர்க்காகம் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளிக்கிறார்கள்.

இந்த ஆண்டு முதல் சரணாலயத்தில் பறவைகள் பார்வையிடும் உயர் கோபுரத்தில் சிறுவர்களுக்கு பத்து ரூபாயும் பெரியவர்களுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி, சனிக்கிழமைகளில் இங்கு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.