“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
திராவிட மாடல் காலவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் திராவிட மாடல் கொள்கைகள் ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனம் குறித்து தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”ஆளுநர் ரவி தனது பொறுப்பை மறந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல் செயல்படுவது கண்டனத்திற்குரியது. திமுக-வையும் பெரியாரையும் எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு சமூக நீதி அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றார். அவர், சனாதன பட்டறையில் பயிற்சி பெற்றவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.
ஒரே பாரதம் ஒரே கலாச்சாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அவர், பதவி விலகி முழு நேர அரசியல்வாதியாக செயல்படலாம். ஆனால், ஆளுநராக இருந்து கொண்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியது கண்டனத்திற்குரியது. ஆளுநரின் விமர்சனங்கள் அரசுக்கு எதிராகவோ திமுகவிற்கு எதிரானதோ என எண்ணினால் அது அறியாமையில் இருக்கின்றோம் என்று பொருள்.
பழைய சனாதன சமூக கட்டமைப்பை மீண்டும் நிலைநிறுத்த விரும்பும் ஆளுநரின் போக்கை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சதி முயற்சிகளை முறியடிக்க வேண்டும். இது திமுக மட்டும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை அல்ல” என தெரிவித்தார்.