தமிழ்நாடு

சிறையில் வைகோ மெளன விரதம்

சிறையில் வைகோ மெளன விரதம்

webteam

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தந்தை வையாபுரியாரின் நினைவு நாளை முன்னிட்டு சிறையில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதையடுத்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது தந்தையார் நினைவு நாளையொட்டி

தண்ணீர் கூட குடிக்காமல் காலை 6 மணி முதல் மாலை மணி 6 வரை மெளன விரதம் கடைபிடிக்கிறார். 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி அவரது தந்தை வையாபுரியார் மறைந்ததையொட்டி கடந்த 44 வருடங்களாக அவரது நினைவு நாளில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.