தமிழ்நாடு

பொதிகை தொலைக்காட்சி அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை

பொதிகை தொலைக்காட்சி அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை

Veeramani

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டுவிட்டு பின்னர் அந்நிறுவன அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவது பற்றி ஆலோசனை நடைபெற்றது. முதல் முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் சைகை மொழி விளக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, எச்.டி தொழில்நுட்பமும் கொண்டுவரப்பட்டுள்ளது. 15 ஆம் தேதி சென்னையில் டி டி தொலைக்காட்சி சார்பில் பட்ஜெட் தொடர்பாக மிக பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்வர், பொருளாதார வல்லுநர்கள் பலர் அதில் கலந்துகொள்ள உள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் இளநீர் கடை வைத்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து, தனது குழந்தை படிக்கும் கிராம பள்ளியை தரம் உயர்த்த கொடுத்துள்ளார். அந்த நிகழ்வு பற்றி பிரதமர் மனதின் குரலில் பேசியுள்ளார். நானும் அவருக்கு எனது சார்பாக பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்