தூக்குக்குடியில் தசரா விழாவை முன்னிட்டு வேடப்பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
மைசூருக்கு அடுத்தபடியா தசரா கொண்டாட்டம் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது தூத்துக்குடியில்தான். தூத்துக்குடியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கும் தசரா விழா 12 நாட்களுக்கு வண்ணமயமாக கொண்டாடப்படும். இந்த விழாவிற்காக தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் என பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், 40 நாட்களுக்கு முன்பிருந்தே விரதமிருக்க துவங்கிவிடுகிறார்கள். அத்துடன் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும் சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா வேடப்பொருட்களின் விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் காளி, அம்மன், குரங்கு, குறவன், குறத்தி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு வேடப்பொருட்கள் விற்கப்படுகின்றன. இதனை வாங்கி நேர்த்தி கடனை செலுத்தும் பக்தர்கள், வேடப்பொருத்தம் மிகவும் அழகாக இருந்தால் முத்தாரம்மன் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகின்றனர்.