தமிழ்நாடு

“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு

“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு

webteam

திருச்சி லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்ட நகைகளில் 1 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பதுக்கி வைத்திருப்பதாக அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருச்சி லலிதா ஜூவல்லரி கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் சுரேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஈடுபட்ட கொள்ளை வழக்கு தொடர்பாக இவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சுரேஷ், லலிதா ஜூவல்லரி வழக்கில் தன்னிடமிருந்து 5.7 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர்  பறிமுதல்  செய்தனர் என்றும் மேலும் 4.7 கிலோ தங்க நகைகள் மட்டுமே பறிமுதல் செய்ததாக கூறுகின்றனர் என்றும் ஒரு பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

இதுபோக மீதமுள்ள ஒரு கிலோ தங்க நகைகள் திருவாரூர் காவல்துறையினரிடம் இருப்பதாக தெரிவித்த அவர், லலிதா ஜூவல்லரி‌ கொள்ளை வழக்கில் மற்றொரு குற்றவாளியான மணிகண்டனை அக்டோபர் 3-ஆம் தேதி மாலையே கைது செய்துவிட்டு இரவுதான் கைது செய்ததா‌க காவல்துறையினர் அறிவித்ததாகவும் புகார் கூறினார்.