போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தம் PT
தமிழ்நாடு

6 அம்ச கோரிக்கைகள்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உடனான பேச்சுவார்த்தை பிப்.7-க்கு ஒத்திவைப்பு

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Jayashree A

போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதி தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இன்று போக்குவரத்து தொழிளாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தையானது, 2 மணி நேரத்திற்கும் மேலாக அம்பத்தூரில் தொழிளாளர்களின் தனி இணை ஆணையர் ரமேஷ் தலமையில் நடைபெற்று வந்தது.

முன்னதாக, போக்குவரத்து தொழிளாளர்களின் ஆறு அம்ச கோரிக்கையை அமல் படுத்த வேண்டிதான் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று,முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிளாளர்கள் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கபோவதில்லை என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆறுஅம்ச கோரிக்கைகளில், போக்குவரத்து தொழிளாளர்களின் ஊதிய உயர்வு அகவிலை படி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது, இந்த வழக்கின் தீர்பானது பிப்ரவரி 6ம் தேதி வெளியிடப்படுகிறது, இந்த தீர்ப்பின் அடிப்படியில் 7 ம்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடரும் என்று போக்குவரத்து தொழிளாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.