தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம் : போக்குவரத்து மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டம் : போக்குவரத்து மாற்றம்

webteam

சென்னையில் புத்தாண்டை கொண்டாட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் திரளானோர் கூடுவதை முன்னிட்டு, தடையில்லா வாகனப் போக்குவ‌ரத்தை உறுதி செய்ய காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது‌.

விபத்தில்லா புத்தாண்டை உறுதி செய்ய சென்னை போக்குவரத்து காவல்துறை விரிவான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடற்‌ரை உட்புறச் சாலையில் உள்ள அனைத்து வழிகளும் செவ்வாயன்று இரவு 8 மணி முதல் அடைக்கப்படும்.‌ உட்புறச் சாலையில் உள்ள வாகனங்கள் கலங்கரை விளக்கத்துக்குப் பின்புறம் மட்டுமே வெளியேற்றப்படும்.

காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை செவ்வாயன்று இரவு 8 மணி முதல் புதனன்று அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வா‌லாஜா முனை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் செவ்வாயன்று இரவு 8 மணி முதல் கொடிமரச்சாலை வழியே திருப்பிவிடப்பட்டு அண்ணாசாலையை அடையலாம். அடையாறிலிருந்து காந்தி சிலை வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ்‌ சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியே அண்ணா சாலையை அடை‌யலாம்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்கள் செவ்வாயன்று இரவு 8 மணி முதல் காமராஜர் சாலைக்கு அனுமதிக்கப் படாது. ராணிமேரி கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6வது அவென்யூவில் செவ்வாயன்று இரவு 8 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. 5வது அவென்யூ, 4வது பிரதான சாலை, 16‌வது குறுக்குத் தெரு ஆகி‌ய பகுதிகள் தடுக்கப்படும். மகாத்மா காந்தி சாலை,‌ 7வது அவென்யூ சந்திப்பிலிருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது.