* 'பத்து ஆண்டுகளாக விஜயகாந்த் செய்த உதவிகளை மக்கள் மறக்கவில்லை. விருத்தாச்சலம் தொகுதி மக்களின் குரலாக தன்னுடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்' என்று அத்தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > 10 ஆண்டுகளாக விஜயகாந்த் செய்த உதவிகளை மக்கள் மறக்கவில்லை - பிரேமலதா நெகிழ்ச்சி பேட்டி
* 'ரெய்டு போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் திமுக பயப்படாது' என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > ரெய்டு பூச்சாண்டிக்கு திமுக பயப்படாது: துரைமுருகன்
* 'இன்னும் 3 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வருமான வரித்துறையை வைத்து எங்களை முடக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். விரிவாக வாசிக்க > 'எமர்ஜென்சியையே பார்த்தவன் நான்; ஐடி ரெய்டுக்கெல்லாம் பயப்படாது திமுக' - மு.க.ஸ்டாலின்
* பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையின், செந்தில்பாலாஜி குறித்த விமர்சனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார். விரிவாக வாசிக்க > ”திமுகவினரை தொட்டு பார் தம்பி”- பாஜக அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி
* தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 138 திமுகவினர் மீதும், 46 அதிமுகவினர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. விரிவாக வாசிக்க > தமிழக தேர்தல்: வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்கள்; தேர்தல் ஆணையம் அறிக்கை
* ஆயிரம் விளக்குத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாஜக வேட்பாளர் குஷ்பு, மக்கள் யாரும் சிஏஏ குறித்து பேசவில்லை என புதியதலைமுறைக்கு பிரேத்யகமாக அளித்த பேட்டியில் கூறினார். விரிவாக வாசிக்க > ”சிஏஏவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பரப்புரைகள் பலன் தராது” - குஷ்பு பேட்டி
* மோடி இல்ல.. மோடி தாத்தா வந்தா கூட திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். விரிவாக வாசிக்க > ”மோடி இல்ல.. மோடி தாத்தா வந்தா கூட திமுகவை ஒன்றும் செய்ய முடியாது” - உதயநிதி ஸ்டாலின்
* கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக வாசிக்க > கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
* மதுரையில் மிக விரைவில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. விரிவாக வாசிக்க > மதுரையில் மிக விரைவில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: பிரதமர் மோடி
* திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அரவகுறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
* திமுக பரப்புரை வாகனத்தை தடுத்து நிறுத்தி பிளக்ஸ் பேனர்களை கிழித்து அ.தி.மு.க. பிரமுகர் அராஜகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. விரிவாக வாசிக்க > திமுக பிரச்சார வாகனத்தை மறித்து பிளக்ஸ் பேனரை கிழித்ததாக அதிமுக பிரமுகர் மீது புகார்
* பல்லாவரம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யக்கோரி காவல்நிலையம் முன்பு கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரிவாக வாசிக்க > பல்லாவரம் மநீம வேட்பாளர் கார் மீது பஸ் மோதிய விபத்து: உரிய விசாரணை நடத்த கோரிக்கை
* திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற, திமுக கிளை செயலாளர் மற்றும் திமுகவினர் 20 பேர் திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்திலிருந்து 365 படிக்கட்டுகளில் முட்டி போட்டு ஏறி வெற்றி பெற வேண்டிக் கொண்டனர். விரிவாக வாசிக்க > திமுக வேட்பாளர் வெற்றிபெற திருத்தணி கோயில் படிகளில் முட்டிபோட்டு ஏறிய திமுகவினர்
* பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் ’மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான்’ என்று துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார். விரிவாக வாசிக்க > ’மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான்’ - ஓ.பி.எஸ் பேச்சு
* தமிழக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக கலந்துகொள்ளவிருந்த பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து!