காலை தலைப்புச் செய்திகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

காலை தலைப்புச் செய்திகள் | 2-ம் நாளாக தொடரும் வேலை நிறுத்தம் முதல் அர்ஜுனா விருது பெற்ற வைஷாலி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இரண்டாம் நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முதல் அர்ஜுனா விருது பெற்றார் செஸ் வீராங்கணை வைஷாலி வரை பலவற்றை தொகுத்து வழங்குகிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது போக்குவரது கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

  • தமிழகம் முழுவதும் 95.62% பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

  • பொங்கல் பண்டிகை வரை வேலைநிறுத்தம் தொடர்ந்தாலும் அறிவித்தபடி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப்பெற்றார் ஆளுநர்

  • சிவில் விவகாரங்களில் காவல்துறையினர் தலையிடக் கூடாது என கூடுதல் டிஜிபி அருண் சுற்றறிக்கை

  • மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல்

  • குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

  • குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

  • பெற்ற மகனை கொலை செய்து சூட்கேஸில் எடுத்து சென்ற பெண் தொழிலதிபர்

  • தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கி பாராட்டு

- இத்துடன் இன்னும் பல முக்கியச் செய்திகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.