அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்புப் படம்
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

webteam

செய்தியாளர் - முகேஷ்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 3வது முறையாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

senthil balaji, ed, madras high court

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மை தொகைகளை திருத்தி பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன் ஆஜராகி, கடந்த 2016 முதல் 2017 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் “செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யபட்ட Pendrive-ல், வேலை வாய்ப்பு தொடர்பாக யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகை பெறப்பட்டது, அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. வங்கி ஆவணங்ளை திருத்தியதாக கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல” என தெரிவித்தார்.

judgement

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நீதிபதி எஸ்.அல்லி இன்று தீர்ப்பளிக்கிறார்.