விவசாயத்தை மேம்படுத்த புதுப்புது யுக்திகளை கையாள வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் விவசாயிகளின் தொடர் உயிரிழப்பு குறித்து மத்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார். விவசாயிகளை காக்க அவர்களின் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மூலப்பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். விவசாயத் துறையை லாபகரமானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான பணிகளைத் தான் மத்திய அரசு 2 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் விவசாயத்தில் சுமுகமான நிலை உண்டாகும். விவசாயிகளுக்காக மத்திய அரசிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. குறைந்த செலவில் லாபம் ஈட்டும் திட்டமும் உள்ளது எனக் கூறினார். மேலும், மாநில அரசுகளுடன் இணைந்து விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.