தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

webteam

4 நாட்களுக்கு தமிழகத்தில் ஆங்காங்கே மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்ததது. உதகையில் நஞ்சநாடு, இத்தலார், எம்ரால்டு போன்ற பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. அதேபோல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் மழை பெய்தது. ராதாபுரம், வடக்கன் குளம், பழவூர் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் கூடிய கனம‌ழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஆங்காங்கே மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  “தென்கிழக்கு வங்கக்கடலில் மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று 20ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மற்றும் சூறைக்காற்று ( 40-50 கிமீ )  உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்துடன் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக” இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.