தமிழ்நாடு

தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் தொடங்குவதில் என்ன தவறு?: ஆளுநர் பேச்சு

தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் தொடங்குவதில் என்ன தவறு?: ஆளுநர் பேச்சு

rajakannan

ஆந்திராவில் தமிழ் பள்ளிகள் இருக்கும்போது தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் தொடங்குவதில் என்ன தவறு? என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 258ஆவது பிறந்தநாள் விழா, தியாகராஜ சுவாமிகளின் 250ஆவது பிறந்தநாள் விழா, அகில இந்திய தெலுங்கு அமைப்பின் சார்பில், சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பன்வாரிலால், “ஆந்திராவில் தமிழ்ப் பள்ளிகள் இருக்கும்போது, தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் தொடங்குவதில் தவறேதும் இல்லை. தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் தொடங்க முதல்வருடன் கலந்து ஆலோசிப்போம்” என்றார்.

வெங்கய்யா நாயுடு பேசுகையில், “வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, பாரதியார் வரலாறுகளை பாட புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும். சாதி, மத பேதங்களை கடந்த நாடு இந்தியா. தீண்டாமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பெற்ற தாய், பிறந்த மண், தாய் மொழியை மறக்கக் கூடாது. ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழர்கள் கலாச்சாரத்தை பறைசாற்றுபவர்கள்; கலாச்சார அடையாளமாக திகழ்பவர்கள்” என்றார்.