தமிழ்நாடு

மதுரையில்  முழு முடக்கம்: பேருந்து போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

மதுரையில்  முழு முடக்கம்: பேருந்து போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

webteam

கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக மதுரையில் முழு முடக்கம் அமலானது.

மதுரை மாவட்டத்தில் கொரோனோ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி,

  • முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து ரத்து 
  • மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை உள்ளிட்ட விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் மதுரை மாவட்ட எல்லைகளில் நிறுத்தம் 
  • சாத்தூர் சிவகாசி ராஜபாளையத்திலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும்
  • அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் காரியாபட்டி வரை மட்டுமே இயக்கப்படும்
  • ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் திருப்புவனம் வரை மட்டுமே இயக்கப்படும்
  • சிவகங்கை மார்க்கத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பூவந்தி வரை மட்டுமே இயக்கப்படும்
  • சிங்கம்புணரி கொட்டாம்பட்டி மற்றும் திருப்பத்தூர் மார்க்கத்தில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மேலூர் வரை மட்டுமே இயக்கப்படும்
  • நத்தம் பகுதியில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கடவூர் வரை மட்டுமே இயக்கப்படும்
  • திண்டுக்கல்லிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் வாடிப்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்
  • தேனி உசிலம்பட்டி வழியாக மதுரை மார்க்கமாய் இயக்கப்படும் பேருந்துகள் செக்கானூரணி வரை மட்டுமே இயக்கப்படும்