தமிழ்நாடு

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

Rasus

2 நாட்களுக்கு தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

போதிய வறட்சி நிவாரணம், அனைத்து வங்கிகளிலும் உள்ள விவசாய கடன்கள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராடிய விவசாயிகள் இன்று 37-ஆவது நாளாக உடைகளை கிழித்துக்கொண்டு பைத்தியக்காரர்கள் போல போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் அய்யாக்கண்ணு, சக போராட்டக்காரர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 2 நாட்களுக்கு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக கூறினார். ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் அமைச்சரிடம் உறுதிமொழி கடிதம் கிடைத்தால் முழுமையாக போராட்டம் வாபஸ் பெறப்படும் எனவும் இல்லையென்றால் போராட்டம் மேலும் வலுவடையும் என்றும் தெரிவித்தார்.