கொரோனா பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதாரத்துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள், ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்குகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மருத்துவ படுக்கை வசதிகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.