தமிழ்நாடு

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்

webteam

2017-18ஆம் நிதியாண்டு‌க்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசு தாக்கல் செய்யப் போகும் முதலாவது பட்ஜெட் இதுவாகும். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையா‌க பட்ஜெட் தாக்கலாகவுள்ளது. காலை ‌10.30 மணிக்கு ச‌ட்டப்பேரவையில் பட்ஜெ‌ட்டை‌ நிதி அமை‌ச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்யவுள்ளார்.கடந்த ஆண்டு ‌பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதா ‌மர‌ணமடைந்த பிறகு, அதிமுகவில் ஏற்‌பட்ட குழப்பங்கள் ‌காரணமாக பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்‌வது தாமதமாகி வந்தது.

இந்த நிலையில், முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறையுடன் நிதி அமைச்சக பொறுப்பையும் ஏற்றிருந்தார். பின்னர், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித்துறை கூடுதல்‌ பொறுப்பாக ஒதுக்க‌ப்பட்டது. இ‌லவச திட்டங்கள் மற்றும் மானியச் சுமை ‌அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை உயர்ந்து வரு‌கிறது. கட‌ன் சுமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவு‌ள்ளது. இதையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. ‌கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்கவில்லை.