rail pt desk
தமிழ்நாடு

திருநெல்வேலி to திருச்செந்தூர்: சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் இன்று சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டதை அடுத்து இன்று சோதனை ஓட்டம் மூலம் ஆய்வு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

webteam

கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழையின் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் பாதை சேதமடைந்தது. இதையடுத்து அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு பல்வேறு பாதுகாப்பு மற்றும் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இன்று ஜனவரி 6, சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

railway line

இதன் காரணமாக ரயில் சேவைகளை பகுதியாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் நாளை பாலக்காட்டில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திருநெல்வேலியில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.

அதேபோல், திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் இன்று திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.