ப.சிதம்பரம் கோப்புப் படம்
தமிழ்நாடு

அயல் நாடுகளுக்குச் செல்பவர்கள் அரசை விமர்சனம் செய்யாமல் மௌன விரதமா இருப்பார்கள்?- ப.சிதம்பரம் கேள்வி

அயல் நாடுகளுக்குச் செல்பவர்கள் மௌனவிரதமா இருக்கிறார்கள் விமர்சனங்களையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியையும் ஒரு ஆட்சியையும் இப்போதுதான் நான் பார்க்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

webteam

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து கலந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

Modi - Rahul Gandhi

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அயல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இந்தியா குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்...

"தரக்குறைவாக விமர்சனம் செய்யவில்லை. விமர்சிக்கிறார்கள். இவர்களால் எந்த ஒரு விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவர், பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விமர்சனம் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா? விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சி ஒரு ஆட்சியை இப்போதுதான் நான் பார்க்கிறேன். அயல் நாட்டிற்குச் செல்பவர்கள் மௌனவிரதமா இருப்பார்கள்" என்று கூறினார்.