விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை அணி முதலிடம் பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் உள்ள பெத்தனாட்சி அம்மன் கோவில் மாசிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு, மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து சென்னை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 38 அணிகள் பங்கேற்றன,
இதையடுத்து நாக் அவுட் முறையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கபடி ஆட்டத்தின் இறுதிப்போட்டியில், சென்னை பியர் சிட்டி அணியும் - ராமநாதபுரம் ஆப்பனூர் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் , ராமநாதபுரம் அணியை வீழ்த்திய சென்னை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. ராமநாதபுரம் அணி இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை தூத்துக்குடி அணியும் பிடித்தன.
இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன., இந்த கபடி போட்டியை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கபடி ரசிகர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்