தமிழ்நாடு

திருவாரூர்: தெப்பத் திருவிழா நடைபெறும் நிலையில் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திருவாரூர்: தெப்பத் திருவிழா நடைபெறும் நிலையில் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

kaleelrahman

தியாகராஜர் கமலாலய குளத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததால் திட்டமிட்டபடி தெப்பத் திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ள கமலாலய குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற இருந்தது. அதன்படி நேற்று மற்றும் நேற்றைய முதல் நாள் இரண்டு நாட்களும் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தெப்பத் திருவிழாவிற்கு தெற்கு கரை மற்றும் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் 15 அடி உயர அலங்கார தூண் சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக தெப்பத்தில் விழாமல் வெளியே விழுந்ததால்; பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் முஸ்கான் உடலை சடலமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், வெங்கடேசன் என்பவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.