தமிழ்நாடு

‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ -  கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ

‘எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்வேன்’ -  கலெக்டரின் அதிரவைத்த வாட்ஸ்-அப் ஆடியோ

webteam

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு பயனாளிகளை தேர்வு செய்யாமல் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை, ஆட்சியர் கந்தசாமி கடுமையாக எச்சரிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் மற்ற அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் அவர் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. 

அதில், “வீடுகளை ஒதுக்குவதற்கு திங்கள்கிழமைதான் கடைசி நாள். நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா?, நீங்கள் பணியில் இருக்கிறீர்களா?. வீடுகளை ஒதுக்காமல் இருக்கும் எத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்ய தயார். தப்பு நடப்பதை பார்ப்பதற்காக நான் இங்கு அமரவில்லை. தப்புகளுக்கு காவல் காப்பவன் நான் இல்லை. தப்பை சரிசெய்ய வேண்டும்; ‌இது என் உச்சகட்ட கோபம். திங்களன்று வீடு திரும்புகையில் வேலையுடன் செல்வதை நீங்களே முடிவு செய்யுங்கள். திங்கள்கிழமைக்குள் வீடுகளை ஒதுக்காவிட்டால், எத்தனை பேராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்ய உள்ளேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.