தமிழ்நாடு

ஆத்தாடி! ஒருநாள் லஞ்ச பண வசூல் 2,20,000 ரூபாய் ?

ஆத்தாடி! ஒருநாள் லஞ்ச பண வசூல் 2,20,000 ரூபாய் ?

webteam

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 2,20,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் நான்கு மாவட்டங்கள் ஒருங்கினைந்த சேலம் மாவட்ட ஆய்வுக் குழுவை சேர்ந்த 20 கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் 4 பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களிடம் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், புரோக்கர்கள் உள்ளிட்டவர்களிடம் உரிய காரணம் இன்றி வைத்திருந்த தொகை பறிமுதல் செய்ததோடு அதற்கான விசாரனையையும் தொடங்கியுள்ளனர். 

இதில் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் யார் யாரிடம் இருந்ததோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும்  லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.  அதன்படி இடைத்தரகர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், கணக்கில் வராத பணம் வைத்து இருந்த போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும்  இரு அலுவர்கள், இடைத்தரகர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகவும் இந்தச் சோதனை முடிய நாளை காலை ஆகிவிடும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர். நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய விசாரணை விடிய விடிய நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை காரணமாக வட்டார போக்கு வரத்து அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.