தமிழ்நாடு

இனி நோ வெயில்; வந்தாச்சு தெர்மாகோல் தொப்பி

இனி நோ வெயில்; வந்தாச்சு தெர்மாகோல் தொப்பி

Rasus

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் திட்டம் ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சத்தமின்றி, போக்குவரத்து காவலர்களின் நல்லதொரு தலைக்கவசமாக விளங்கி வருகிறது தெர்மாகோல் தொப்பி. கோடை வெயிலிலிருந்து சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களை அது பத்திரமாக காத்து வருகிறது.

சென்னை கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்தவர் யாரும் இல்லை. வெயில் வாட்டியெடுத்தாலும், வாகனப் பெருக்கத்தால் தத்தளிக்கும் சென்னைப் பெருநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் போக்குவரத்து காவலர்களின் பணி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இவர்களுக்கு போக்குவரத்து நெரிசலைக் காட்டிலும் பெரும் இன்னலாக மாறியிருக்கிறது, நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெயில்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து காவலர்களை வெயிலிலிருந்து காத்திடும் வகையில், தெர்மாகோல் தொப்பி வழங்கப்படுகிறது. சாதாரண தொப்பி அணிந்தால் ஏற்படும் வியர்வை பாதிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தெர்மாகோல் தொப்பி, தங்களுக்கு நல்ல காவல் அரணாக உள்ளதாக கூறுகின்றனர் போக்குவரத்து காவலர்கள்.

தெர்மாகோல் தொப்பி மட்டுமின்றி, வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவலர்களைக் காத்திடும் வகையில், நாளொன்றுக்கு இருமுறை, மோர் மற்றும் ஜூஸ் ஆகியவையும், சென்னை பெருநகர காவல்துறையால் வழங்கப்படுகின்றன.