தமிழ்நாடு

நெகிழி பாட்டிலில் வருகிறதா மது? என்ன சொல்கிறது டாஸ்மாக் நிறுவனம்?

நெகிழி பாட்டிலில் வருகிறதா மது? என்ன சொல்கிறது டாஸ்மாக் நிறுவனம்?

webteam

மதுவை நெகிழி பாட்டிலில் விற்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போதுவரை நெகிழி பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில் விளக்கம் அளித்துள்ளது.

பிரதாப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக நெகிழி பாட்டில்களில் விற்க 1996 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டால் தீங்கு ஏற்படும் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுவை கண்ணாடி பாட்டிகளில் விற்பனை செய்வதென்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும், அதற்கெதிராக வழக்கு தொடர முடியாதென்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் மதுவை நெகிழியில் விற்கும் திட்டம், தற்போது வரை இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.