தமிழ்நாடு

தொடரும் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம்

தொடரும் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம்

webteam


தமிழக அரசுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரை திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் தொடரும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திரைத்துறையைச் சேர்ந்த சங்க பிரதிநிதிகளும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரநிதிகளும் சந்தித்து கேளிக்கை வரியை குறைக்க கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான மனுவையும் முதல்வரிடம் திரைத்துறையினர் அளித்தனர். இந்த கேளிக்கை வரியால் திரைத்துறையைச் சேர்ந்த பல லட்சம் பேர் பாதிப்படைவார்கள் என்றும் முதல்வரை சந்தித்த பல்வேறு திரைத்துறை சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தமிழக அரசுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரை திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். மேலும் ‌தி‌ரைப்படத்திற்‌கான மாநில அரசின் கேளிக்கை‌ வரியை நீ‌க்ககோரி நாளை அமைச்சர்களை சந்தித்த பின்னர் இப்பிரச்சனைக்கு தீர்வு ‌கிடைக்கும் என்று நம்புவதாகவும் ‌அபிராமி ராமநாதன் தெரிவித்தார். தாங்கள் ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை என்றும், கேளிக்கை வரியை தான் தாங்கள் எதிர்ப்பதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார். இதே கருத்தை தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சமூகமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.