தமிழ்நாடு

பரம்பரை சொத்தில் பங்கு தராததால் பெண் தீக்குளிக்க முயற்சி

பரம்பரை சொத்தில் பங்கு தராததால் பெண் தீக்குளிக்க முயற்சி

webteam

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. 

கரூர் ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை குறித்து புகார் அளித்தனர். அப்போது பெண் ஒருவர் ஆட்சியரின் கார் அருகே, மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஊர்க்காவல் படையினர் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது. அவர் திருப்பூர் மாவட்டம் சேர்ந்தவர் என்றும், கரூர் ஆண்டாங்கோயில் பகுதியிலுள்ள பரம்பரை சொத்தை சகோதரர்கள் அபகரித்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்தார். பின்பு, அந்த பெண்ணின் புகாரை விசாரிப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.