தமிழ்நாடு

இந்த நாட்களில் கடல் சீற்றமாக காணப்படும் : வானிலை ஆய்வு மையம்

இந்த நாட்களில் கடல் சீற்றமாக காணப்படும் : வானிலை ஆய்வு மையம்

webteam

தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை முதல் நவம்பர் 24வரை கடல் சீற்றமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் நாளை 2.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், வட தமிழக கடல் பகுதிகளில் 2.0 மீட்டர் முதல் 3.8 மீட்டர் வரை அலைகள் உயர வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிவர் புயலாக மாறி கரையை கடக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.