தமிழ்நாடு

திருச்சியை 2 வது தலைநகரம் என்று அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது -வியாபாரி கூட்டமைப்பினர்

திருச்சியை 2 வது தலைநகரம் என்று அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது -வியாபாரி கூட்டமைப்பினர்

webteam

திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்ககாவிடில் போராட்டம் அறிவிக்கப்படும் என வியாபாரி கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது “ திருச்சியை இரண்டாவது தலைநகரம் ஆக்கவேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவு. ஆனால் மதுரை இரண்டாவது தலைநகரம் என்று கூறி வருவது, அவரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம்.

ஜாதி, மத கலவரம் இல்லாத பூமி திருச்சி. கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பேச்சை ஏன் அமைச்சர்கள் எடுக்க வேண்டும்? என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் அனைத்து கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

திருச்சியை இரண்டாவது தலைநகரம் என்று அறிவிக்காத கட்சி ஆட்சி கட்டிலில் அமர முடியாது. இது குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது. எதையோ மறைக்க இந்த பிரச்சினை எழுப்பப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.