தமிழ்நாடு

அசல் ஓட்டுநர் உரிமம் வரும் 5ம் தேதி வரை கட்டாயமில்லை: தமிழக அரசு

அசல் ஓட்டுநர் உரிமம் வரும் 5ம் தேதி வரை கட்டாயமில்லை: தமிழக அரசு

rajakannan

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வரும் 5ம் தேதி வரை கட்டாயப்படுத்தப்படாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, லாரி உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி துரைசாமி முன்பு இன்று வந்தது. அப்போது,வாகன சட்டப்பிரிவு 139இன் படி, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என நீதிபதி கூறினார். இது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்ற அவர், விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். 

பின்னர், பிற்கலில் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ”மழை போன்ற காலங்களில் ஆவணங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. அப்பொழுது அதனை பாதுகாப்பது கடினம். இயற்கை சீற்றங்களின் போது சேதமடைந்தால் யார் பொறுப்பு? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்து, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வரும் 5ம் தேதி வரை கட்டாயப்படுத்தப்படாது என்று தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்தார்.