தமிழ்நாடு

மயங்கி விழுந்தார் குழந்தை சுர்ஜித்தின் தாய்!

மயங்கி விழுந்தார் குழந்தை சுர்ஜித்தின் தாய்!

webteam

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் தாய் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

குழந்தையின் பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுக்கு முன்பு போர்வெல் தோண்டப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது. கிணற்றில் விழுந்தபோது 26 அடியில் இருந்த குழந்தை, மீட்புப் பணியின்போது கீழே சென்றதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், குழந்தையின் நிலையை கண்டு, தாய் கலாமேரி, திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுர்ஜித் விழுந்தது குறித்து அவரது உறவினர் சார்லஸ் கூறும்போது, ‘5 ஆண்டாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்துவிட்டான்’ என்றார்.