தமிழ்நாடு

திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தம்  : டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்

திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தம்  : டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்

webteam

திட்டமிட்டபடி நாளை காலை 6 மணி முதல் வேலை நிறுத்‌தத்தில் ஈடுபட‌ ‌உள்ளதாக தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை உள்ளடக்கி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளிலிருந்து கேஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாயிரத்து 500 வாகனங்களுக்கு சங்கத்தின் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது‌. ஆனால், நான்காயிரத்து 800 வாகனங்களுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்கி‌ன. இதனால் மீதமுள்ள 700‌ வாகனங்களுக்கு பணி ஒப்பந்தம் வழங்குமாறு சங்கத்தின் சார்பில் பல முறை எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டம் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை‌. இதனையடுத்து பொதுக்குழுக்கூட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென தீர்மா‌னம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நாளை காலை 6 மணி காலவரையற்ற வேலைநிறுத்‌தத்தில் ஈடுபட‌ ‌உள்ளதாக தென்ம‌ண்ட‌ல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஏற்கெனவே அறிவித்தது. இந்த சூழலில் திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்‌தத்தில் ஈடுபட‌ ‌உள்ளதாக தென்ம‌ண்ட‌ல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை உள்ளது.