போக்சோ வழக்கில் தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (55). இவர் கடந்த ஆண்டு எதிர் வீட்டில் உள்ள சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பான போக்சோ வழக்கு, அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் வழக்கின் தீர்ப்பு தனக்கு சாதகமாக வராது என்று கருதிய வெள்ளையன், வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)