ரத்த வெள்ளை அணுக்கள் குறைவால் பாதிக்கப்பட்ட மாணவனின் ஆசையை நிறைவேற்றிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்.
சென்னை அனகாபுத்தூர் வ.உ.சி. தெருவில் பாலாஜி - சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ருதிலயா, சிவமனோஜ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் சிவமனோஜ் சிறு வயதிலிருந்து ரத்தத்தில் வெள்ளைஅணு குறைவால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனின் ஈகைக்குணம் மற்றும் செயல்பாடுகளை கண்டு பெரிதும் ஈர்க்கப்பட்ட சிவமனோஜ், அவரை சந்தித்து வாழ்த்து பெற கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடிதத்தைப் படித்த காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், பள்ளி மாணவன் சிவமனோஜின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நேரில் அழைத்து பேசியுள்ளார், அப்போது பள்ளி மாணவன் சிவமனோஜ் தான் வரைந்த ஓவியங்களை ஏ.கே.விசுவநாதன் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், அவர் மாணவன் சிவமனோஜ்க்கு சாக்லேட் மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.