சென்னையில் ரூ.184 கோடி செலவில் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ள பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த திருப்புகழ் குழு அளித்த அறிக்கையின்படி மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி மழைநீர் வடிகால்களின் வடிவம் இறுதியானதும், ஐஐடி நிபுணர் குழுவின் ஆலோசனை பெறப்பட்டு 2 மாத காலத்தில் பணிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடியும் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில் தேவைப்படும் இடங்களில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கவும், ஏற்கெனவே அமைந்திருக்கும் பகுதிகளில் மழைநீர் வடிகால்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க 184 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் தி.நகரில் மட்டும் 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவுள்ளன.