நாட்டிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இப்பட்டியலில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா முதல் 4 இடங்களில் உள்ளதாகவும் நிதி ஆயோக் கூறியுள்ளது. பல்வேறு துறைகளில் புத்தாக்கங்கள் படைப்பதில் நாட்டிலேயே கர்நாடகம், தமிழகம் முதல் 2 இடங்களில் உள்ளதாகவும் நிதி ஆயோக் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.