மருத்துவமனை, நர்ஸிங் ஹோம்களில் ஆக்சிஜன் தொடர்பான சிக்கல்கள் இருந்தால் 104 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான பல சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க ஏற்கெனவே தமிழக அரசு சுகாதாரத்துறை பல தொடர்பு எண்களை அளித்துள்ளது. இதுதவிர மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே 4 தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொது சுகாதாரத்துறை 24 மணிநேர கட்டுப்பாட்டு எண்களைக் கொடுத்திருக்கிறது. இதுதவிர டி.எம்.ஏ மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரக அலுவலகத்தில் 4 தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற அவசரத் தேவைகள் ஏற்படும்போது 104 என்ற உதவி எண்ணுக்கு அழைத்து தங்களுக்குத் தேவையான உதவியைப் பெறலாம் என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணிநேரமும் 104 என்ற எண்ணில் கால் சென்டர் செயல்படுகிறது என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.