ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ. 1000ஆக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக விற்பனைக்கு ஆற்றுமணல் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு ஆற்று மணலின் அடிப்படை விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆற்றுமணலை பெற இணையதளத்தில் விண்ணப்பித்து தொகையும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுமக்கள் மற்றும் ஏழை எளியோர் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ. 1000ஆக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முறைகேடு ஏற்படுவதை தடுக்க 24 மணிநேரமும் சிசிடிவி மூலம் ஆற்று மணல் விற்பனை கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு மணல் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.