papa vetri pt desk
தமிழ்நாடு

இங்கிலாந்து: செம்ஸ்போர்ட் நகர கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன்!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் இங்கிலாந்து நாட்டில் நகரமன்ற கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

திருவாரூர் அருகே குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா சுப்பிரமணியன். அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான இவரது மகன் ‘பாப்பா வெற்றி’ என்பவர், கடந்த 15 வருடங்களுக்கு முன்பு படிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார். இதையடுத்து அங்கேயே தங்கியிருந்த அவர், லண்டன் சிட்டிசனாக தகுதி பெற்றுள்ளார்.

poster

தற்போது லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவர், தன்னுடைய தந்தையை போல் அரசியலில் அதிக நாட்டம் கொண்டிருந்திருக்கிறார். லண்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் நடந்த லண்டன் செம்ஸ்போர்ட் (Chelmsford) நகர கவுன்சிலர் தேர்தலில், அக்கட்சி சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.

அந்த தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேட்ரிக் மான்லியை விட கூடுதல் வாக்கு பெற்று கவுன்சிலராக தேர்வும் செய்யப்பட்டுள்ளார் பாப்பா வெற்றி.

papa vetri

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தில் நகரமன்ற கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளதால், திருவாரூர் மாவட்டத்தில் அவருடைய சொந்த ஊரான பெரும்பண்ணையூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊர் முழுவதும் அவருக்கு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.