தமிழ்நாடு

16 சிறைச்சாலைகள் கைதிகளுக்கு நாளை யோகா பயிற்சி !

16 சிறைச்சாலைகள் கைதிகளுக்கு நாளை யோகா பயிற்சி !

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சர்வதேச யோகா தினம் 2015 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சி்த் தலைவர்கள் என பலரும் நாளை சர்வதேச யோகா தினத்தெயாட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி மேற்கொள்வது மூலம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

கைதிகளுக்கான இந்த யோகா பயிற்சியை ஈஷா யோகா மையம் நடத்துகிறது. "உபயோகா" எனப்படும் இந்தப் பயிற்சி மூலம் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகளின் மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என சிறைத்துறையினர் நம்புகின்றனர்.