எதிர்க்கட்சிகள் அமளி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு: பட்டியலினத்தோர் மத்திய அமைச்சரானதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டி இருக்கிறார்.
+2 மாணவர்கள் 100% தேர்ச்சி: தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியானது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு: மதிப்பெண்கள் போதவில்லை என கருதும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், 22ஆம் தேதி முதல் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.
குடியரசுத்தலைவருடன் முதல்வர் சந்திப்பு: குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்கு தலைமை தாங்க அழைப்புவிடுத்ததாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
26ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 26ஆம் தேதி முதல் முதல் விநியோகிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு ரத்து: ஆர்.எ.பாரதி உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று கூறி, பட்டியல் இனத்தவரை அவமதித்ததாக ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
நடிகர் விஜய் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்: சொகுசு காருக்கான வரி விவகாரம் தொடர்பான நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பா? - அரசு மறுப்பு: செல்போன் உரையாடல்களை கண்காணித்ததாக வெளியான குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. தனிநபர் ரகசியம் காக்கப்படுவது அடிப்படை உரிமை என்றும் விளக்கமளித்திருக்கிறது.
தொடரும் மீனவர்கள் போராட்டம்: சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி 3வது நாளாக 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.
வனக்கல்லூரியில் மரங்கள் வெட்டப்பட்டதில் முறைகேடா?: கோவை வனக்கல்லூரியில் அனுமதியின்றி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டிருப்பது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலமானது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராமச்சந்திரன் உறுதியளித்திருக்கிறார்.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றின் மூலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12ஆயிரத்து 804 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்தும் வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி உயர்ந்திருக்கிறது.
வடமாநிலங்களில் கனமழை: டெல்லி, ஹரியானா, குஜராத்தில் மழை கொட்டித் தீர்க்கிறது. தாழ்வான பகுதிகளை மழை நீர் சூந்ததால் மக்கள் அவதியில் உள்ளனர்.
பயங்கரவாதிகள் இருவர் என்கவுன்ட்டர்: காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியானில் நடந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.