தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: கல்லணை தண்ணீர் திறப்பு | ஹால்மார்க் கட்டாயம் | ரொனால்டோ சாதனை

விரைவுச் செய்திகள்: கல்லணை தண்ணீர் திறப்பு | ஹால்மார்க் கட்டாயம் | ரொனால்டோ சாதனை

Sinekadhara

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.

ஜூன் 22-இல் கூடுகிறது காவிரி மேலாண் ஆணையம்: 22 ஆம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம்கூடுகிறது. இதில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை - இன்று தொடக்கம்: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

நகரப் பேருந்துகளை இயக்க முடிவு?: கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை இயக்க முடிவு என தகவல் வெளியாகவுள்ளது.

9 லட்சத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா சிகிச்சை: இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்திற்கு கீழ் குறைந்தது. 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி சபாநாயகராக செல்வம் பதவியேற்பு: புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றார். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சட்டப்பேரவைத் தலைவரானது இதுவே முதன்முறையாகும்.

மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம்: பாலியல் புகாரில் தேடப்பட்டுவரும் சிவசங்கர் பாபா டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள ஆசிரமங்களில் பதுங்கியுள்ளாரா என சிபிசிஐடி தனிப்படைதேடிவருகிறது.

நாட்டுவெடிகுண்டு வீசி இளைஞர் கொலை: சென்னை பள்ளிக்கரணையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இளைஞரை கொன்றுவிட்டு தப்பிய கும்பலுக்கு காவல்துறை வலைவீசி தேடிவருகின்றனர்.

இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற உத்தரவு: மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' கட்டாயம்: தங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என உத்தரவிட்டு தங்க நகைகளில் மோசடி செய்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ட்விட்டருக்கு சட்ட பாதுகாப்பு நீக்கம்?: ட்விட்டர் நிறுவனத்திற்கு இணைப்பு தளத்திற்கான சட்ட பாதுகாப்பு நீக்கப்படுகிறது. மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்க மறுப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொல்லியல் சின்னங்கள் திறப்பு: செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரொனால்டோ புதிய சாதனை: யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் ரொனால்டோ அசத்தலாக விளையாடியுள்ளார். ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.