தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி : 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி : 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

Veeramani

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 10 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னைக்கு ஹெச்.எம் ஜெயராமும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு என்.சி சாரங்கனும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு, ஐபிஎஸ் அதிகாரி வனிதா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு, தஞ்சை என அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பரவ வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்துதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது இவர்களின் பணியாகும். கடைகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் கொரோனா தடுப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் இவர்கள் கண்காணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின், அன்று மாலை 5 மணிக்கு கண்காணிப்பு குழு அதிகாரிகளுடன் காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளார்.