தமிழ்நாடு

"தமிழின் தொன்மை 4,500 ஆண்டுகளுக்கும் அதிகம்"- ஆ.ராசா

"தமிழின் தொன்மை 4,500 ஆண்டுகளுக்கும் அதிகம்"- ஆ.ராசா

jagadeesh

தமிழின் தொன்மை 4,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று வரலாறு இருப்பதாக திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

டெல்லி, திருப்பதியில் உள்ள நிகர்நிலை சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்ற, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா, சமஸ்கிருத மொழியின் தொன்மை எவ்வளவு தாராளம் அளித்து கணக்கிட்டாலும் 2,500 வயதுதான் என்று குறிப்பிட்டார். 

வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் தமிழ் மொழியின் வாக்கியங்களை மேற்கோள் காட்டுவதாகவும், ஆ.ராசா சுட்டிக்காட்டினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நேரம் முடிந்துவிட்டதாக அவைத் தலைவர் அறிவுறுத்தினார். ஆனால், தனது கருத்துக்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் ஆவேசத்தில் ஆ.ராசா தொடர்ந்து பேசினார். அவருக்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஆதரவாக குரல் கொடுத்தனர்.