தமிழ்நாடு

நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு

நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு

webteam

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமாணி ராஜினாமா ஏற்கப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ‌ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

இதன் காரணமாக அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை. கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருந்தார்.

இந்நிலையில் தஹில்ரமாணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுள்ளார்.  மேலும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது