தமிழ்நாடு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

JustinDurai
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக சென்னை கிண்டி, மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனி, 2-வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கடாச்சலம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.