தமிழ்நாடு

"ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை"-உச்சநீதிமன்றம் !

"ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை"-உச்சநீதிமன்றம் !

jagadeesh

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கேட்டு அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

அத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடையில்லை என தெரிவித்தது.